பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை, உடனடியாக அந்த நாடு வெளியேற்ற வேண்டும்’ என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் அறிவித்தார்; ஆனால், பாகிஸ்தான் அரசு, இதை அலட்சியப்படுத்தியது.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்துவதாக, அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது.
இந்நிலையில், பாக்.,கில் பதுங்கி இருந்த தலிபான் மற்றும் ஹக்கானி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, 27 பேரை, ஆப்கனிடம் ஒப்படைத்ததாக, பாக்., வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பாக்., வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர், முகமது பைசல் கூறியதாவது:
பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 75 ஆயிரம் பொதுமக்களும், 6,000 வீரர்களும் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர்; இதை இனியும் அனுமதிக்க முடியாது.
இங்கு பதுங்கி இருந்து, ஆப்கானிஸ்தானில் நாசவேலைகள் செய்யும் பயங்கரவாத செயல்களை தடுத்தாக வேண்டும்.
இதன் அடிப்படையில், தலிபான் மற்றும் ஹக்கானி அமைப்பைச் சேர்ந்த, 27 பயங்கரவாதிகளை, கடந்த நவம்பர் மாதம், ஆப்கனிடம் ஒப்படைத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.