தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதில் சரியான விடயத்தை செய்வார்கள் என அரசியல் தலைவர்களை எவ்வளவு தூரம் நம்புகின்றீர்கள் என கேட்கப்பட்டமைக்கு மக்கள் அனுரகுமார திசநாயக்க(48.5) மீது அதிகளவான நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஜேவிபி தலைவரிற்கு அடுத்தபடியாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மீதும்(36.8) எதிர்கட்சி தலைவர் மீதும்(29.1) மீதும் மக்கள் அதிக நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் அனுரகுமார திசநாயக்க மீது அதிகளவு நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் சிங்களவர்கள் முஸ்லீம்களை விட தமிழர்களும் மலையகதமிழர்களும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு அதிக ஆதரவை வெளியிட்டுள்ளனர் என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
சிங்களவர்களில் மூன்றில் ஒன்றை விட அதிகமானவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு ரணில் விக்கிரமசிங்க சரியானதை செய்வார் என கருதுவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிங்கள பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வைத்துள்ளனர்,ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவர்களாக டலஸ் அலகப்பெரும தினேஸ்குணவர்த்தன மகிந்;த ராஜபக்ச ஆகியோர் குறைவான மக்கள் ஆதரவையே பெற்றுள்ளனர் எனவும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு சரியான தீர்வை காணக்கூடியவர் என மக்கள் குறைந்தளவு நம்பிக்கை கொண்டுள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.