வெள்ளவத்தையில் இன்று தன்னைதானே சுட்டுதற்கொலை செய்துகொண்டுள்ள இராணுவவீரர் சம்பவம் இடம்பெற்றவேளை தனது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மே 9ம் திகதி சம்பவங்களிற்கு பின்னர் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இராணுவபாதுகாப்பு வழங்கப்பட்டது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நான் இந்த விவகாரத்திற்கு பொறுப்பான அதிகாரி லெப்.கேர்ணல் குணதிலகவை தொடர்புகொண்டு எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என தெரிவித்தேன் அதனை தொடர்ந்து அவர்கள் நீக்கப்பட்டனர் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் இந்த பிரிவினர் எனதுவீட்டிற்கு அருகிலிருந்து வெளியேறி தொலைவில் நிலை கொண்டுள்ளதை என்பதை பார்த்தேன் எனதெரிவித்துள்ள சுமந்திரன் வீதிகளில் வழமையாக இராணுவத்தினர் காணப்படுவதால் இவர்களை எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என நான் கருதவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இந்த பிரிவை சேர்ந்த ஒரு இராணுவவீரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற துரதிஸ்டவசமான செய்தியை கேள்விப்பட்டேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.