வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலேயே ஒரு இலட்சம் ரூபா வழங்குவதற்கு தீர்மானித்து அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதனை உயிர்களின் விலையாக கொள்ள வேண்டியதில்லை. உறவுகளின் உணர்வுகளை கொச்சப்படுத்தும் நோக்கம் எமக்கில்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தொடரின்போது, காணாமல் போன நபர்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை பெற்றுள்ள காணாமலாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் ஒரு இலட்சம் ரூயஅp;பாவைச் செலுத்துவதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அனுமதிக்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்களும், அரசியல், சிவில் தரப்பினரும் மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்கள்.
இதனையடுத்து நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்து வெளியிடும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அதுவொரு சுயாதீனமான கட்டமைப்பாகும். அந்த அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அடுத்தகட்டச் செயற்பாடுகள் குறித்து கரிசனை கொள்ளப்பட்டுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் சான்றாதாரங்கள் காணப்படுமாயின் அதனை குறித்த அலுவலகத்திடத்தில் வெளிப்படுத்தி அதன் ஊடாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். குறிப்பாக சட்டமா அதிபர் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன.
நீதி அமைச்சு என்ற வகையில்ரூபவ் சுயாதீனக் கட்டமைப்பான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான அலுவலகத்திற்கான நிருவாகம் உள்ளிட்ட விடயங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றோம்.
அதேநேரம், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அந்த வகையில் அவர்களுக்கு தொழிற்பயிற்சி, சுயதொழில் ஆரம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி தொழில் புரிவேராக உருவெடுப்பத்கு உதவிகளை வழங்கின்றோம்.
தற்போதைய நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மனிதாபிமான நடவடிக்கையாக அவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வழங்குவதற்கு தீர்மானக்கப்பட்டுள்ளது.
எனினும், இது அவர்களுக்கானவொரு தற்காலிக நிவாரணமே. மாறாக அவர்களின் போராட்டத்தனை மலினப்படுத்தும் செயற்பாடொன்றல்ல. காணாமலாக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் சொந்தங்கள் படுகின்ற வேதனைகளை நான் நன்கு அறிவேன். அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தவில்லை.
அதேநேரம், அவர்களை இந்தப் பணத்தினை பெற்றுக்கொள்ளுமாறும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. அரசாங்கத்தின் தற்போதைய நிலையில் இந்த தொகையைவிடவும் அதிகமானதை வழங்க முடியாத நிலைமைகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.