தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம்(கில்டு) கடந்த பல வருடங்களாக வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் சங்கத்தின் பதிவு நீக்கப்படுதாக சங்க பதிவாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் சங்கதில் தங்கள் கம்பெனி மற்றும் படத்தின் டைட்டிலை பதிவு செய்தவர்கள் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து சங்கத்தின் தலைவர் ஜாக்குவார் தங்கம் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சங்க பதிவு ரத்து ஆகிவிட்டது, அதனால சங்கத்தில் இனி யாரும் பேனர் பதிவு செய்ய வேண்டாம். சென்சார் பண்ண வேண்டாம், டைட்டில் பதிவு செய்ய வேண்டாம், நமது தலைப்புகளை மற்ற சங்கங்கள் எடுத்துக்கொள்வார்கள், இப்படி தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும் பதிவு அலுவலகத்துக்கு இவர்களே நேரடியாக சென்று நமது சங்கத்தை பதிவிலிருந்து நீக்கி விடுமாறு கூறி வருகின்றனர்.
உண்மை நிலை என்னவென்றால் நமது சங்க பதிவு ரத்து ஆக போகிறது என பதிவுத் துறையில் இருந்து நமக்கு கடிதம் வந்தது. ஏன் இப்படி ஒரு கடிதம் நமக்கு வந்தது என்றால், நாம் கடந்த சில வருடங்களாக நம்முடைய சங்க வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை .
வரவு செலவு கணக்கை நமது சங்க பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் வாங்கிய பிறகுதான் அதை பதிவு துறை ஏற்றுக் கொள்வார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு முன் இருந்த நிர்வாகிகள், நமது சங்க பணம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதை நான் கண்டுபிடித்து கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறேன். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதனால பொதுக்குழு கூட்ட இயலவில்லை.
.இப்படியான ஒரு சூழலில் தற்சமயம் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் மூலமாக . ஓய்வுபெற்ற நீதிபதி ராஜசூர்யாவை நியமித்து அவர் மூலமாக பொதுக்குழு நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில் பொதுக்குழு கூடி, வரவு செலவு கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, நமது சங்க பதிவு சரி செய்யப்படும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.