தமிழ் மரபுத் திங்கள் கனேடிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது

தமிழ் மரபுத் திங்கள் கனேடிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது

ஒட்டாவா, ஒன்றாரியோ – ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தனிநபர் முன்மொழிவாக ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு மே 20ம் திகதியும், செப்ரெம்பர் 29ம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும், அனைத்து முக்கிய கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடாவெங்கும் தமிழ்-கனேடியர்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்புகளை சுட்டிக்காட்டி, முன்மொழிவுக்கு ஆதரவாக உரையாற்றினர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பில் முன்மொழிவு எம்-24 ஏற்றுக்கொள்ளப்பட்டது

ஒட்டாவா, ஒன்றாரியோ – ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரிக்கும் எம்-24 முன்மொழிவு அனைத்துக் கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கனேடிய பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தனிநபர் முன்மொழிவாக ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவு மே 20ம் திகதியும், செப்ரெம்பர் 29ம் திகதியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விவாதம் நடைபெற்ற இரண்டு தினங்களிலும், அனைத்து முக்கிய கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடாவெங்கும் தமிழ்-கனேடியர்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்புகளை சுட்டிக்காட்டி, முன்மொழிவுக்கு ஆதரவாக உரையாற்றினர்.

“அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் என அறிவிப்பதன் மூலம், கனேடிய சமூகத்திற்கு தமிழ்-கனேடியர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புக்களையும், தமிழ் மொழியினதும் பண்பாட்டினதும் செழுமையையும், தமிழ் மரபுபற்றிய அறிவையும் புரிந்துணர்வையும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஊட்டவேண்டியதன் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கவேண்டும் என்பது இந்த அவையின் கருத்தாகும்” என எம்-24 முன்மொழிவு தெரிவிக்கிறது.

“தமிழ்-கனேடியர்கள் நாடுதழுவிய வகையில் எமது சமூகத்திற்கு ஆற்றியுள்ள அளப்பரிய பங்களிப்புக்களையும், தமிழ் மொழியினதும், மரபினதும், பண்பாட்டினதும் செழுமையையும் அங்கீகரிக்கும் வரலாற்று மைல்கல் இது” என ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கூறினார்.

ஸ்காபரோ-தென்மேற்று தொகுதியின் லிபரல் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரின் பாராளுமன்ற செயலருமான பில் பிளாயர் உரையாற்றுகையில் மிசிசாகா, டேர்கம், ஒட்டாவா, தொரன்ரோ, மார்க்கம், ஏஜக்ஸ், பிக்கரிங் உள்ளிட்ட நகரசபைகளும், ஒன்றாரியோ மாநிலமும், தொரன்ரோ கல்விச்சபையும் ஏற்கனவே சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அங்கீகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார். “இது எமது பொருளாதாரத்திற்கும், ஏனைய துறைகளிற்கும் தமிழ் சமூகம் தொடர்ந்தும் ஆற்றிவருகின்ற அளப்பரிய பங்களிப்புக்களிற்கு தெளிவான சான்று” என அவர் கூறினார்.

எதிர்க்கட்சி அங்கத்தவர்களும் முன்மொழிவின் முக்கியத்துவத்தை ஆதரித்து சிலாகித்தனர். “தமிழர்களின் உயிர்ப்பான பண்பாட்டையும், மரபுகளையும், நீண்ட வரலாற்றையும் சக கனேடியர்களுக்கு வெளிக்காட்டவும், அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்த முன்மொழிவு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்” என மார்க்கம்-யூனியன்வில் தொகுதிக்கான கொன்சவேற்றீவ் பாராளுமன்ற உறுப்பினர் பொப் சொரோயா விவாதத்தின்போதான தனது உரையில் தெரிவித்தார்.

இந்த முன்மொழிவுக்கு ஆதரவவு தெரிவிப்பது “கனடா பல்வகைமையால் பலம் பெறுகிறது” என்பதை ஏற்றுக்கொள்வதை நோக்கி முன்வைக்கப்படும் இன்னொரு அடி என வன்கூவர்-கிழக்கு தொகுதியின் என்.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜெனி குவான் முன்மொழிவை ஆதரித்து ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

“இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டதானது கட்சி எல்லைகளைக் கடந்ததோடு, பல ஆண்டுகளாக பல்வேறு அரச மட்டங்களையும் பல்வேறு அரசியல் சார்புலைகளையும் கொண்ட அரசியல்வாதிகளினதும், சமூகத்தலைவர்களினதும், சமூக அமைப்புகளினதும் ஒருங்கிணைந்த பரிந்துரையாலும் பங்களிப்புகளாலும் எட்டப்பட்ட அடைவாகும். இந்த முக்கியமான அடைவை எட்டுவதறகான எம் அனைவரினதும் ஒருங்கிணைந்த ஒருமுகப்பட்ட முயற்சிக்கு இது சான்று” என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

முதன்முதலாக கனடா தழுவிய வகையில் பாராளுமன்றத் திடல் உட்பட்ட இடங்களிலே தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடும் நிகழ்வுகள் சனவரி 2017ல் ஆரம்பமாகும். இவை கனடாவின் 150ம் ஆண்டு நிறைவையொட்டிய கொண்டாட்டங்களுடன் உடனிகழ்வது குறிப்பிடத்தக்கது.tamil mara

6,899 total views, 576 views today

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News