யாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சிக் கூடத்தை வட மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் இன்று பிற்பகலில் திறந்து வைத்து ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டார்.
(வெளி மாகாணங்கள் அல்லது மாவட்டங்களில் இருந்து இடம்பெறும் ஆக்கிரமிப்புக்கள் நல்லாட்சி அரசின் பல்வேறு ரூபங்களில் இடம்பெறுகிறது. வனத் திணைக்கள், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், பறவைகள் சரணாலாயங்கள், மீன் பிடியாக இருக்கலாம், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பறித்துக் கச்சிதமாக செய்துவருகிறது.
வடமராட்சியில் சட்டவிரோதமாக கடலட்டை பிடிப்பவர்கள், அரச காணிகளில் குடியேற்றியும், ஒரு சில சங்கங்களை வழைத்துப்போட்டுக்கொண்டும் செயற்படுகிறார்கள். சட்டவிரோத செயலுக்கு அரசு அனுமதியளிக்கிறது.
சரத் பொன்சேகா,இராணுவ முகாங்களின் எண்ணிக்கையை – இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்கத் தேவையில்லை எனக் கூறியுள்ளார்.அன்று தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, சங்கிலியன் பூங்காவில் இதை ஏன் சொல்லவில்லை.
2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் உங்களுக்கு வாக்களித்ததை – நன்றி மறந்ததை காணமுடிகிறது. இது நன்றி மறந்த செயல். போர்க் குற்றவாளியான நீங்கள் வெறித்தனத்தைக் காட்டுகிறீர்கள். மக்கள் கொடூரமாகப் பாதிக்கப்பட்டபோது – மிகக் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியவர் மஹிந்த, இரண்டாவது இவர். மூளைச் சலவை செய்துகொண்டு மக்கள் வாக்களித்ததை மறந்துவிட்டார்.