– தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல் அவர்களுக்கான சுயாட்சி என்பவை தான் எமது நிலைப்பாடு.. -ரஜீவ்காந்
சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கி;ன்ற,அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு,மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது என தெரிவித்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் சுயாட்சிக்காக தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்
அரகலய போராட்ட குழுவான மக்கள் போராட்ட முன்னணியாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
வடக்குகிழக்கில் பிறந்து வளர்ந்து வடக்குகிழக்கினது ஒடுக்குமுறைகளை மிக மோசமாக சந்தித்தவன் என்ற வகையிலே எங்களது அரசியல் பிரச்சினைகள்,இன்று வரை தீராமலிருக்கின்றது என்ற வருத்தம் இன்றுவரை எங்களிற்கு இருக்கின்றது.
குறிப்பாக இன்று கருப்பு ஜூலை தினம்,1983ம் ஆண்டு கொத்துகொத்தாக தமிழ் மக்கள் தலைநகரில் எந்தவிதகரிசனையும் இல்லாமல்,கொல்லப்பட்டிருந்தார்கள்.
இன்றுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லாத அந்த நிகழ்வு போல எத்தனை ஆயிரக்கணக்கான கொலைகளும், வன்முறைகளும், காணாமல்ஆக்கப்படுதலும் ,தமிழ் மக்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.தொடர்ந்து அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த நேரத்தில் தென்னிலங்கையிலிருந்து எத்தனையோ கட்சிகள் வடக்குநோக்கி வருகின்றன,அவர்கள் தமிழ் மக்களிற்கு என்ன வேண்டும் என்ன கொடுக்கப்போகின்றோம் என்பது தொடர்பில் இங்கு ஒன்றை கூறிவிட்டு,தென்னிலங்கையில் அதற்கு மாற்றான வேறு ஒன்றை கூறுவார்கள் கூறுவார்கள்.
அங்கு இனவாதத்தையும் இங்கு வாக்குகளை பெறுவதற்கான யுக்தியையும் சிங்கள அரசியல்வாதிகள் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே இந்த விடயத்தில், இந்தமாதிரி விடயங்களை தென்னிலங்கையிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் சரியானவிடயங்களை தெரிவிக்ககூடிய ஒரே கட்சியாக மக்கள் போராட்ட முன்னணி உருவெடுத்துள்ளது.
நான் நினைக்கின்றேன், வரலாற்றில் முதலதடவையாக சுயாட்சியுடன் கூடிய , ஒற்றைய ஆட்சியை நிராகரிக்கி;ன்ற,அலகுகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியோடு,மக்கள் போராட்ட முன்னணி இந்த அரசியல் களத்தில் குதித்திருக்கின்றது.இது தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் மத்தியில் எப்படியான குழப்பங்களை ஏற்படுத்தும்,நன்கறிந்தும் அவை எல்லாவற்றையும் தாண்டி,மக்கள் நலன்கருதி, ஒட்டுமொத்தநாடும் முன்னோக்கி செல்லவேண்டும்,நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற நோக்கில் மக்கள் போராட்ட முன்னணி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது.
குறிப்பாக தென்னிலங்கையில் இருக்ககூடிய பிரதான இரு சிங்கள இடது சாரி கட்சிகளும்வடக்குகிழக்கில் நீண்டகாலமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு இடதுசாரி கட்சியும் இணைந்து இந்த கட்சியை உருவாக்கியுள்ளன.
குறிப்பாக சுயாட்சி அலகுகள் என்பது தமி;ழ் மக்கள் மிக நீண்டகாலமாக தீர்வு என்ற அடிப்படையில் எதனை கேட்டுக்கொண்டிருந்தார்களோ,அதனை எந்த வித பாரபட்சமும் இல்லாமல் அவர்களிற்குஒரு ஆட்சிமுறையை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
எழுத்துவடிவத்தில்,மூன்றுமொழிகளிலும் முன்மொழியப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில கட்சிகள் மாறிமாறி கூறுவது போல இல்லாமல்,தீர்க்கமாக உண்மையாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தை நான் இன்று ஊடகங்களிற்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
நீங்கள் என்று ஆட்சிக்கு வரப்போகின்றீர்கள் இதெல்லாம் எப்போது நடக்கப்போகின்றது என்ற கேள்விகள் எல்லாம் மக்களிற்கு இருக்கலாம்.
நாங்கள் போராட்ட முன்னணி என்று நாங்கள் சுயாட்சி என்ற முடிவை எடுத்தோமோ அதற்காகவும் எங்கள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்பதை நான் இங்குள்ள தமிழ் மக்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் தெளிவுபடுத்த ஆசைப்படுகின்றேன்.
குறிப்பாக வடக்குகிழக்கை பொறுத்தவரையில் சிங்களமயமாக்கல் திட்டமிடப்பட்டு மிக நீண்டகாலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கி;ன்றது,இதனை நிறுத்துவதற்கான முன்மொழிவுகளை மேற்கொண்டிருக்கின்றோம்,இந்த அடிப்படையில் சிங்களமயமாக்கல் தடுத்துநிறுத்தப்படும்.
அதேபோல பௌத்தமயமாக்கல் தொல்பொருள் என்ற பெயரிலே குறிப்பாக இலங்கையின் வடக்குகிழக்கிலே இடம்பெறுகின்றது. எந்தவிதமான தயவு தாட்சண்யம் இல்லாம் வடக்குகிழக்கு தமிழ் மக்களின் அடையாளங்களிற்கு மேல் எத்தனையோ ஆயிரக்கணக்கான நிலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, அந்த நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் அவை தமி;ழ் மக்களிற்குரிய நிலங்கள் எனவே தொல்பொருள் என்ற பெயரில் கைப்பற்றப்பட்ட அத்தனை நிலங்களையும் விடுவிக்கவேண்டும் என்ற கொள்கையையும் நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.