முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்களால் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் தலைமையிலான செயலணி கடந்த நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாவட்ட மக்களின் கருத்துகளை செவிமடுத்து பதிவு செய்தது.
இதன்போது தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் தெரிவித்தவற்றை செயலணி பதிவு செய்துள்ளது. அவற்றில் சில வருமாறு,
கிழக்கு மாணத்தில் தமிழ் இந்துக்கள் அதிக பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். ‘லவ் ஜகாத்’ என்ற கட்டமைப்பு மூலமாக தமிழ்ப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இலக்கு வைக்கின்றனர்.
வறுமை, தொழில் வாய்ப்பு இன்மை ஆகியவற்றால் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் கடைகளில் வேலை செய்ய நேர்கிறது. இதை முஸ்லிம்கள் வாய்ப்பாக எடுக்கின்றனர். அப்பாவி தமிழ்ப் பெண்கள் காதலின் பெயரால் இவர்களின் வலைகளில் சிக்கி மதம் மாற நேர்கின்றது.
இதே போல பல விதமான சலுகைகளையும் காட்டி தமிழ்ப் பெண்களை வசீகரிக்கின்றனர். தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்களும் தமிழ் மாணவிகளை மயக்கி எடுக்கின்றனர். தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை மொத்தத்தில் சீரழிந்து விடுகின்றது.
இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் தமிழர்களும், சிங்களவர்களுமே. ஆனால் வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் கபளீகரம் செய்யப்பட்டு ஊர்களின் பெயர்கள்கூட மாற்றப் பட்டுள்ளன. அதே போல தமிழ் பாடசாலைகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு சந்தைகளாக மாற்றப்பட்டன. முஸ்லிம் அதிகாரிகளின் உதவியுடன் இவை நடக்கின்றன.
இது அராபிய நாடு அல்ல. ஆனால் அராபிய கலாசாரம் திணிக்கப்படுகின்றது. காத்தான்குடியை சவூதி அரேபியா போன்று ஆக்கி வைத்துள்ளார்கள். காதி நீதிமன்ற முறைமை நமது நாட்டுக்கு தேவை அற்றது. தமிழ் இந்துகளால் பசுக்கள் தெய்வமாக மதிக்கப்படுகின்றன. சிங்கள பௌத்தர்களும் பசுக்களைக் கொல்வதில்லை. ஆனால் இறைச்சிக்காக மாடுகளை முஸ்லிம்கள் அறுக்கின்றனர். இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மாடறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வர வேண்டும் எனவும் செயலணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.