பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பு பேரவையில், இடைக்கால அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பளிக்கப்படாததை அடுத்தே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தெரிவு செய்யப்பட்ட ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி அனந்தன், அரசியலமைப்பு பேரவையில், தமக்கு உரையாற்ற சந்தர்ப்பம் அளிக்குமாறு பலமுறை சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
எனினும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவருக்குப் பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக சபாநாயகரிடமும், சிவசக்தி அனந்தன் முறைப்பாடு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.