சைவப்புலவர் சு. செல்லத்துரை தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கிய பேராளுமை என யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழறிஞரும் கல்வியாளருமான சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் மறைவு குறித்து முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என் சண்முகலிங்கன் வெளியிட்டுள்ள புகழஞ்சலிக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் பண்பாடுகண்ட உன்னத ஆளுமையான சைவப்புலவர் சு. செல்லத்துரை ஆசிரியரின் பிரிவு நெஞ்சில் எழுதும் துயரம் கனமானது. முன்னைப்பழமைக்கும் பின்னைப்புதுமைக்கும் மூலவராய் விளங்கிய எங்கள் பண்பாட்டின் பெருஞானப்பக்குவமாகவும விளங்கிய அவரின் பேராளுமை ஈடிலாதது.
நடமாடும் ஞானப் பெட்டகமாய் எங்கள் காலத்தின் வழிகாட்டியான அவரின் பணிகள் யாவும் அர்த்தம் நிறந்தவை.அவரோடு பழக்கிடைத்த பொழுதுகளின் மேன்மை நிகரிலாதது.அவரின் உள்ளக் கமலத்தைப் பிரதிபலித்த வெள்ளை நிற ஆடை; உளளங்களைக்கொள்ளை கொள்ளும் தொடர்பியல் வல்லமை எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை. தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கிய பேராளுமையான அவரின் மேலான நினைவுகளைக் காத்திருப்போம்…
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]