தமிழ்பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பது நல்லிணக்கமுயற்சிகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வடமாகாணத்திற்கான மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும் யோசனை குறித்து அவர் கடும் கரிசனை வெளியிட்டுள்ளார்.
தமிழ்பொதுவேட்பாளரை ஆதரிக்கும் திட்டம் நாடு தற்போது முன்னெடுத்திருக்கும் நல்லிணக்க முயற்சிகளிற்கு இடையூரை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது கொள்கைகள் தகுதிகள் குறித்தே கவனம் செலுத்தவேண்டும்,இனஅடிப்படையில் அதனை ஆராயக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரிவுகளிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழர்களின் நோக்கம் குறிக்கோள் பாதிக்கப்படும்,தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்,இதன் காரணமாக ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளிற்கு தென்பகுதியைகுற்றம்சாட்டக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகள் காரணமாக சாதாரண அப்பாவி தமிழ் மக்களே பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள், என தெரிவித்துள்ள அவர் தீவிரவாதத்தை தூண்டும் ஆபத்துக்களிற்கு எதிராக எச்சரித்துள்ளதுடன்,அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிவினைக்கு முன்னுரிமை வழங்ககூடாது,வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை, வலுப்படுத்துதல்,வடக்கிற்கு முதலீட்டை வரவழைத்தல்,அந்த பகுதியை வர்த்தக நடவடிக்கைகளிற்கான தளமாக மாற்றுதல்,போன்றவை குறித்தே கவனம் செலுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.