தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிப்பேரவையின் உறுப்பினராக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார்
தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காலநிலைமாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆட்சிபேரவையில் இணைத்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதமடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பேரவைக்கு தமிழக முதல்வர் தலைவராக உள்ளார்.மீள்புதுப்பித்தக்க சக்தி வளங்களிற்கான வாய்ப்பு தமிழ்நாட்டில் அதிகளவுள்ளது வனங்களும் உள்ளன என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.