ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி, என்றும் நன்மையே நடக்கும்.
சிவசக்தியை மனதிலும், கங்கை அன்னையை தலையிலும் சுமந்த ஸ்ரீ சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள சிவ சித்தேஸ்வர அஷ்டகத்தை கூறி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் நம்மை சூழ்ந்துள்ள தீமைகள் நீங்கி, என்றும் நன்மையே நடக்கும்.
சிவ ஸித்தேச்வர அஷ்டகம்
மஹா தீர்த்த ராஜஸ்ய தீரே விபாந்தகம்
மஹாபூ திரூபம் மஹாத்மைக வேத்யம்
மஹா ஸித்திபூரா ப்ரதானை கதக்ஷம்
பஜாமைவ ஸித்தேச்வரம் சித்த: சம்பும்!
பொருள்
மஹா தீர்த்தக் கரையில் விளங்குபவரும், சிறந்த விபூதி (ஐஸ்வர்யம்) வடிவானவரும், மஹாத்மாக்களால் மட்டும் அறியப்படுபவரும், பெரிய பெரிய சித்திகளைக் கொடுப்பதில் சமர்த்தரும், எல்லோருக்கும் நன்மையைத் தருபவருமான ஸித்தேச்வரரை மனமே நீ எப்பொழுதும் நினைப்பாயாக!
மனோஜஸ் வதக்ஷ்யக்னி பஸ்மாவசேஷ:
மதாந்தச்ச தக்ஸோ கதச்சோச்ய பாவம்
மனோஜாச்ச தக்ஷக்னி தாந்தோ மதாந்தோ
பஜே நிர்மதத்வாய ஸித்தேச்வரம் த்வாம்!
பொருள்
உன்னுடைய நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பல் ஆனான். மிகவும் மதம் பிடித்திருந்த தட்சப்பிரஜாபதி வருந்தத்தக்க நிலையை அடைந்தான். எரிந்துபோன மன்மதனாலே பாமர ஜனங்களும் தவித்து மதம் பிடித்தலைகிறார்கள். ஆகையால் எனக்கு மதம் சற்றும் இல்லாமல் இருப்பதற்காக ஸித்தேச்வரரை பூஜிக்கின்றேன்!
இயம் சாஸ்பி கங்கா நிபத்தா கபர்த்தே
மதாட்யா யதஸ்ஸா கணக்ஸீர கல்பம்
விஸ்ருஷ்டா ஜெகத் பாபநாசாய யேன
ஸ்வயம் சித்த ஸித்தேச்வரம் சிந்தயைனம்!
பொருள்
மதம் பிடித்த கங்கையானவள் உமது ஜடாமுடியில் நீர்த் துளிக்கு ஒப்பாக கட்டுப்பட்டு நிறுத்தப்பட்டாள். ஜெகத்தின் பாபங்களை போக்குவதற்காக எவரால் விடுவிக்கப்பட்டாளோ அப்பேர்பட்ட ஸித்தேச்வரரை ஹே மனமே நீ சிந்தை செய்!
ந தேஸ்ந்தோ சாதிர் ஹரி:ஸ்ஸோஸ்பி தாதா
வராஹோ பவன் னூர்த்வ ஹம்ஸீ பவம்ஸ்ச
ததா தேஹி ஸாக்ஷ்யம் பஜே பாந்தமேவ
மஹா லிங்க ரூபேண ஸித்தேச்வரம் த்வாம்!
பொருள்
விஸ்ணு வராஹமாய் உனது அடியைக் காணவும், பிரம்மாவானவர் அன்னமாகி உமது முடியைக் காண்பதற்கும் இயலாமல் சாட்சி தன்மையை அடைகிறார்கள். அப்பேர்பட்ட ஜோதியாய் விளங்கும் மஹாலிங்கரூபனை அந்த ஸித்தேச்வரரை சேவிக்கின்றேன்.
சிவோஸ்யம் ப்ரதேசோ மஹான் மத்யதேச:
சிவா ஜாஹ்னவீ நித்ய ஸித்த ப்ரவாஹா
சிவ ஸ்த்வம் சிவம் நித்ய ஸித்தம் ததான:
சிவோ நஸ்ஸதா தேவ! ஸித்தேச்வர ஸ்யா!
பொருள்
இந்த மத்ய பிரதேசம் மிகவும் மங்களமானது. இங்கு நித்தியம் கங்கை பிரவாஹமாக மங்கள ரூபமாக பிரவஹிக்கின்றாள். எப்பொழுதும் நம்மிடமுள்ளதான சிவத்தன்மையைக் கொடுப்பவராக எங்களுக்கு மங்களம் அளிப்பவராக ஸித்தேச்வரராக நீங்கள் விளங்க வேண்டும்.
பதாப்ஜே த்வதீயே ஸ்வ கீயாக்ஸி பத்மம்
புரா பூஷண த்வேன நாராயணோ த்தாத்
இதீதம் புராவ் ருத்தமத் த்யாத்ர ஸத்யம்
பதர்யோ ஹரிஸ்ஸாது ஸித்தேச்வரா அகாத்!
பொருள்
உன்னுடைய பாதபதமத்தில் முன்பொரு சமயம் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய தாமரைக் கண்ணை அர்ப்பணித்தார். என்ற பழைய செய்தி இங்கு உண்மையாகின்றது. (பதரியில் உள்ள ஹரியானவர் ஸித்தேச்வரருக்கு தமது நயனங்களுள் ஒன்றை புஷ்பமாக அளித்தார்).
கபர்தாத் த்வதீயாத் விஸ் ருஷ்டாபி கங்கா
புன:ஸேவிதும் த்வா மஹோ பத்த வாஞ்சா!
ஸ்காசே த்வ தீயேதி பாரப்ர வாஹா
நிஜாம் போஸ் பிஷேகாய ஸித்தேச்வராகாத்!
பொருள்
உம்முடைய ஜடையில் இருந்து விடுவிக்கப்பட்ட கங்கயானவள் மறுபடியும் உம்மை சேவிப்பதற்கு ஆசையுள்ளவளாக மிகுந்த பிரவாஹத்துடன் உமக்கு அபிஷேகம் செய்வதற்காக ஸித்தேச்வரரே உம்மிடம் வந்தாள்.
நமத்தோஸ் ம்யஹம் சேன் நமத்தோஸி பின்ன:
நமத்தோஸி தஸ்த்வம் நமத் தோஷ தாதா!
நமத்தேஸ்ஸி பின்ன ஸ்த்வ மித்யைக்ய தோஷம்
நமத்ப்ய: ப்ரதேஹீஹ சித்தேச்வர த்வம்!
பொருள்
நான் மதம் பிடிக்தவனாக இருப்பினும் நீர் என்னைத்தவிர வேறல்லவே! வணங்குபவர்களால் சந்தோஷப்படுத்தப்படும் நீர் உம்மை வணங்குபவர்க்கும் சந்தோஷத்தை அளிக்கிறீர். ‘என்னைத் தவிர நீ வேறில்லை ஒன்றுதான் என்ற மகிழ்ச்சியை/ சந்தோஷத்தை ஸித்தேச்வரரே நீர் வணங்குபவர்களுக்கு கொடுக்கிறீர்கள்.
இதி ப்ரயாக சித்தேச்வர பக்திப் ருஜ் ஜனதா ஹ்ருதி
ச்லோ காஷ்டகம் மிதம் நித்யம் வர்த்தய தாம் சுபம்!
பொருள்
இப்படியாக ப்ரயாக ஸித்தேச்வரரிடம் பக்தியுள்ள மக்களின் உள்ளங்களில் இந்த அஷ்டக ஸ்லோகம் நித்தியம் சந்தோஷத்தை வளர்க்கட்டும்! சுபம்!
தினமும் அதிகாலையில் நீராடிய பின், அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று பால் அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி இம்மந்திரத்தை கூறி பூஜை செய்து வந்தால், நம் வாழ்க்கையில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]