தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் வியாழக்கிழமை முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவை எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் மாகாணங்களுக்கு எவ்வாறன அதிகாரங்களை வழங்குவது என்பது தொடர்பாக ஆராய நால்வர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்தோடு இந்த கலந்துரையாடலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்தல் மற்றும் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாகவும் பேச்சுக்கள் இடம்பெற்றன.
இதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழித்தல் மற்றும் தேர்தல் சீர்திருத்ததிற்கு பலரும் எதிர்ப்பை வெளியிட்டார்கள் எனவும் சுமந்திரன் கூறினார்.