பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மணமகனும் மணமகளும் தமிழர்கள்போல் உடையணிந்து திருமணத்திற்குச் செய்யவேண்டிய கலாசாரச் சடங்குகள் யாவற்றையும் கடைப்பிடித்து இந்த திருமணத்தினச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட் மற்றும் கரோலின் ஆகிய காதலர்களே புதுச்சேரியில் இவ்வாறு திருமணம் செய்துகொண்டனர்.
இந்த திருமணம் புதுச்சேரி மாநிலம் முதலியாப்பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் இடம்பெற்றுள்ளது.
மணமகள், மணமகன் ஆகியோரின் உறவுகள் தமிழர் கலாசார உடையணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் மணமகன் மணமகளின் நெற்றியிலே திலகமிட்டு கழுத்திலே தாலியையும் கட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குரியதாக ஆக்கியுள்ளது.
ஆங்கிலேயரின் காலணித்துவ காலத்தில் புதுச்சேரி மாநிலம் பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்தபின்பும் பிரான்ஸ் நாட்டு மக்களின் கலாசாரத்தொடர்புகள் புதுச்சேரியுடன் இருந்துவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.