ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP: 26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே 650 என்ற விமானத்தில் அவர்கள் இன்று காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – கிளாஸ்கோவில் நடைபெறும் “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 30 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டார்.
சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க ஆகியோரும், ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபாயவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடாத்தியதுடன் இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து விசாரரணை தேவை என்றும் கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]