தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் மாவீரர்கள் தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம் மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர்மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டு முதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.