இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கையைச் சுமந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரனால், யாழ் மாவட்டச் செயலகத்தில் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், கட்சியின் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசிபெறச் சென்ற சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார்.
மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் கொள்கைகள் வெற்றிபெற நீங்கள் செயற்படவேண்டும் தேர்தலில் வென்றுவரத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.