இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களின் படகுகளை விடுவிக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்றுவரும் நிலையில் இரண்டாம் கட்டமாக 32 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் அத்துமீறிய கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 180 படகுகள் வரை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரிப் பகுதிகளை சேர்ந்த கடந்தொழில் படகுகளே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இதில் 42 படகுகளை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
நேற்று இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 7 படகுகளில் ஒன்று கடலில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.