தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 23-ந் தேதி காலை (திங்கட்கிழமை) 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தாக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் 1.9.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.