தமிழகம் முழுவதும் இன்றும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இன்றும் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகை வழங்கப்படுகிறது.
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையான 2ஆயிரம் ரூபாய் நேற்றுமுதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தினமாக இன்று கொரோனா நிவாரணம் வழங்கப்படுமா என கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், இன்று டோக்கன் பெற்றவர்கள் மட்டும் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதியைக் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.