தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.
கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸார் விடுத்த அறிவித்தல் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்கள் இருவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என கோட்டை நீதிவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.