முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்ரினன் மாலதி அவரகளின் நினைவு நாளும், தமழீழ பெண்கள் எழுச்சி நாளும் 10-10-2017 அன்று இலண்டனில் உள்ள மஹாராஸ்ரா மண்டலில் நாடுகடந்த அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டது.
போராளிகளின் தலைமறைவு போராட்ட காலங்களில் துணிச்சலோடும் தேசப்பற்றோடும் தம் வாழ்வைப் பற்றி சிந்திக்காது பல வழிகளில் உதவிகள் புரிந்தும் காப்பாற்றியதும் பெண்களே. அவாறான உறுதியும் வீரமும் கொண்ட பெண்களை சிறந்த ஆயுத பயிற்சி பெற்ற போராளிகளாக உருவாக்க விரும்பினேன். எனும் தமிழீழ தேசிய தலைவரின் ஆசியே இந்த மகளிர் எழுச்சி நிகழ்வாகும்.
தியாக தீபம் திலீபனின் நினைவாக இடம்பெற்ற இரத்த தானம் தொதொடர்பான புத்தகமும் குறித்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
முதல் முறையாக பெண்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகவும், அதிகளவான பெண்கள் கலந்து கொண்கொட ள சிறப்பு எழுச்சி நிகழ்வாகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் பெருமளவில் தமிழீழ உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.