தமன்னா எடுக்க போகும் புதிய ரிஸ்க் – ஜெயிப்பாரா ?
பிரபு தேவாவுடன் தமன்னா நடித்துள்ள ‘தேவி’ படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாகி உள்ளது. பிரபுதேவாவுடன் தமன்னா நெருக்கமாக இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் அவர் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபுதேவாவுடன் சேர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது தமன்னா நடிக்கும் ‘பாகுபலி -2’ அடுத்த வருடம் திரைக்கு வருகிறது. அதன்பிறகு படத்தயாரிப்பு நிறுவனம் பற்றிய அறிவிப்பும் வரலாம் என்று கூறப்படுகிறது. சினிமாவில் ஜெயிச்ச மாதிரி தயாரிப்பாளர் அவதாரத்திலும் ஜெயிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .