பிரபல கணிதமேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது. இதில் ஆனந்த் குமாராக ஹிருத்திக் ரோஷன் நடிக்க, விகாஷ் பால் இயக்குகிறார். படத்திற்கு சூப்பர் 30 என்று பெயரிட்டுள்ளனர். அடுத்தாண்டு துவக்கத்தில் படம் ஆரம்பமாகும் என தெரிகிறது. தற்போது படத்திற்கு முந்தைய பணிகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இந்நிலையில் தன் வாழ்க்கை படமாவது குறித்து ஆன்ந்த் குமார் கூறியிருப்பதாவது…. என் குழு மீது அதிக நம்பிக்கை உள்ளது. இந்தப்படத்திற்காக மொத்த படக்குழுவும் அதிக ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாளும் உழைத்து வருகிறார்கள். இந்தப்படம் அனைவரும் மறக்காத ஒரு படமாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.