பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‛நம்ம வீட்டுப்பிள்ளை’. சிவகார்த்திகேயன் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரகனி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு முதலில் எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப் பிள்ளை’ தலைப்பை தான் வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அதை வைத்துள்ள தயாரிப்பு நிறுவனம் தர மறுத்துவிட்டது. இதையடுத்து ‛நம்ம வீட்டுப் பிள்ளை’ என பெயர் வைத்தனர்.
இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் கதைக்கு எம்.ஜி.ஆர். நடித்த ‛உலகம் சுற்றும் வாலிபன்’ தலைப்பினை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளனர்.
அதனால் சென்னை திரும்பியதும் அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திடம் பேசி தலைப்பை பெற முயற்சி செய்ய முடிவெடுத்துள்ளனர்.