நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் மாறன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை தனுசின் ரசிகர்களும், பொதுமக்களும் புதிய தகவல் தொழில்நுட்ப உத்தி மூலம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
‘துருவங்கள் பதினாறு’, ‘மாபியா சப்டர் 1’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மாறன்’. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன், இளவரசு, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜெயப்பிரகாஷ், ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் இன்று ரசிகர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் ‘வாழ்க்கைல நேர்மையாய் இருக்கிறது ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் சாமர்த்தியமா இருக்கிறது..” என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த முன்னோட்டத்தில் நடிகர் தனுஷ் புலனாய்வு ஊடகவியலாளர் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிய வருவதால் ரசிகர்கள் கட்டற்ற ஆர்வத்தில் பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | easy24newskiruba@gmail.com