தனுஷின் கொடி படம் ரஜினியின் இந்த படத்தின் கதையா?
தனுஷ் ஒரு அரசியல்வாதியாக நடித்திருக்கும் இந்த படத்தில் திரிஷா, அனுபமா ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படம் ரஜினி நடித்த படையப்பா படத்தின் தழுவல் என்ற செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
படத்தில் தனுஷ் த்ரிஷாவை காதலிப்பாராம், ஆனால் அரசியல் வாழ்க்கைக்காக தனுஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய, வாழ்க்கையை இழந்த த்ரிஷா தனுஷை பழிவாங்க நினைப்பாராம்.
இதேபோல் தான் ரஜினியின் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் முதல் பாதியில் ரஜினியை காதலிப்பதும், இரண்டாம் பாதியில் அவரை பழிவாங்குவதும் போல் நடித்திருப்பார்.