வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு 2 தேசிய விருதுகளும் கிடைத்தது.
அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதேபோல் இந்தியில் கடந்த மார்ச் மாதம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை இரண்டே மாதத்தில் 3 கோடிக்கும் அதிகமானோர் யூடியூபில் பார்த்துள்ளனர். அசுரன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது தனுஷின் கர்ணன் படமும் இந்தியில் டப் செய்து வெளியிடப்பட உள்ளதாம்.