வலப்பனை – ஊவா கோவிலுக்கு அருகில் தனியார் பேருந்தொன்று பாதையை விட்டு விலகி 75 மீட்டர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலையில் இருந்து சுற்றுலாவுக்காக நுவரெலிய பிரதேசத்துக்கு நேற்று பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வலப்பனை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலிய மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனுராதபுரம் மற்றும் மஹிந்தலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.