சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 577 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 63,908 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே மேல் மாகாணத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் நேற்று 994 வாகனங்களில் பயணித்த 1796 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமல்படுத்தப்பட்டதிலிருந்து, வாகனங்களை ஆய்வு செய்ய மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் வீதித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.