சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 498 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதன்போது 42 வாகனங்களும் தடுப்பு காவலில் எடுக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 62,085 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே நேற்றைய தினம் மேல் மாகாணத்திற்குள் உள் நுழைய முயன்ற 489 வாகனங்களில் பயணித்த 1,153 நபர்களும், வெளியேற முயன்ற 316 வாகனங்களில் பயணித்த 639 நபர்களையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமல்படுத்தப்பட்டதிலிருந்து, வாகனங்களை ஆய்வு செய்ய மேற்கு மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் வீதித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.