சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 344 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலக் கட்டத்தில் 14 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 78,597 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் நேற்றைய தினம் 1,357 வாகனங்களில் பயணித்த 2,088 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்
இதன்போது உரிய காரணமின்றி மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 134 வாகனங்களில் பயணித்த 242 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டும் உள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]