தமிழரசுக்கட்சி பொதுநலனுக்கான வீட்டு சின்னமல்ல அது தனிப்பட்ட நபரின் தனியார் நிறுவனம் என சட்டத்தரணி தவராசா ((KV. Thavarasha) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (11) யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இற்கு பின்னர் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றது.
தமிழ் தேசியத்தின் வளர்ச்சி
இந்நிலையில், நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக ஒருமித்த குரலாக செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம்.
இளைஞர்களும் ஏனைய கட்சியில் உள்ளவர்களும் வந்து எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு
அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம் அந்தவகையில் தான் நாங்கள் நேற்று வரையில் சிந்தித்து நேற்றையதினம் தான் ஒரு முடிவு எடுத்தோம்.
அதன் அடிப்படையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு சார்பில் போட்டியிட தீர்மானித்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலை, மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல், இளைஞர்களின் அரசியல் வருகை மற்றும் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நோக்கம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை காண கீழுள்ள காணொளியை பார்வையிடவும்,