தனது 11 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா பிரதேசத்தை நபரொருவருக்கே 22 வருடங்களுக்கு பின்னர் கம்பஹா மேல் நீதிமன்றத்தால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சபை பேருந்து பரிசோதகராக கடமையாற்றிய 57 வயதான நபரே இந்த குற்றச்செயலை புரிந்துள்ளார்.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.
அபராதம் மற்றும் இழப்பீடும் செலுத்தாவிடின் குற்றவாளிக்கு மேலும் ஒரு வருடம் தண்டனை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், 35 ஆவது வயதில் தனது, 11 வயதான மூத்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் 1997 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்போதே குறித்த நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 2002 ஆம் ஆண்டு ஏப்பிரல் 3 ஆம் திகதி சட்டமா அதிபரால் குறித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.