தனக்கு பிடித்த பிரபல நடிகருடன் முதன் முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது எல்லாருக்கும் பிடித்தமான தமிழ் பேசும் நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி, மிக விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் டூயட் ஆட போகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தில் தான் கீர்த்தி நடிக்க இருக்கிறார்.
மேலும் தனக்கு விஜய் சேதுபதி மிகவும் பிடித்த நடிகர் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.