தனக்கு தானே திருமணம் செய்து உலகளவில் பிரபலமான பெண் தற்போது தன்னை விவாகரத்து செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
லண்டனில் பிரிங்டன் என் னும் பகுதியில் வசித்து வரும் சோபியா என்ற பெண் கடந்த வருடம் அவரை அவரே திருமணம் செய்து கொண்டார். இதனால் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். உலகில் உள்ள ஆண்கள், பெண்கள் யாரையும் தனக்கு பிடிக்கவில்லை என்றும் எனக்கு என்னைத்தான் பிடித்திருக்கிறது என்றும் அப்போது கூறியிருந் தார்.
இதற்காக நிஜ திருமணம் போல கோலாகலமாக அரங்கம் அமைத்து வெள்ளை நிற உடை அணிந்து தனக்குத்தானே மோதிரம் மாற்றிக்கொண்டார். இதன் மூலம் அவர் ஒரே நாளில் வைரலாகத் தொடங்கினார்.
இதையடுத்து காதலில் விரு ப்பம் இல்லாத பலர் இவரைப் பின்பற்றி தனக்குத்தானே திருமணம் செய்யும் முடிவை எடுத்திருக்கின்றனர். ‘சோலோ காமி’ என்று அழைக்கப்படும் இந்த திருமண முறை தற்போது அங்கு மிகவும் பிரபலம் ஆகியிருக்கிறது. இந்த முறையின் மூலம் பெண்கள் மட்டும் இல்லாமல் நிறைய ஆண்களும் தனக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ள தொடங்கி இருக்கிறார்கள். இந்த திருமணம் நிஜ திருமணம் போல் நடந்தாலும் இங்கிலாந்து நாட்டில் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட முடியாது என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சோபியா என்ற அந்த பெண்மணி தற்போது”தனக்கு தன்னுடன் வாழ்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும், அடிக்கடி தனக்குள் சண்டை போட்டுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார். மேலும் இப்படியே சண்டை போட்டால் தன்னை தானே வெறுத்துவிடுவேன்” என்பதால் தன்னை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பால் அவர் மீண்டும் பிரபலம் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் அவர் இந்த விவாகரத்துக்கு தற்போது புதியதொரு காரணம் ஒன்றும் கூறியிருக்கிறார். அதன்படி அவர் ‘ரவுரி பாராட் ‘ என்ற இன்னொரு ஆணுடன் காதலில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இன் னும் சில மாதங்களில் அந்த ஆணை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ரவுரி பாராட் என்பவரும் சில வருடங்களுக்கு முன்பு தனக்குள்ளேயே காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இவர்கள் இருவரும் தனக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டது அதிகாரபூர்வமாக செல்லாது என்பதால் இவர்களால் விவா கரத்தும் பெற முடியாது என தெரிவிக்கப்படுகிறது.