இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.