தஞ்சை கோவில் போல ஓங்கியது தமிழன் புகழ்… இனி ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாது கலாமின் சுவடுகள்… இந்தியாவில் ஒரு தீவே கலாமின் பெயரில்…
ஏவுகணைகளாக இருந்தாலும், ஆயுத பரிசோதனைகளாக இருந்தாலும் அது இங்கே தான் நடத்தப்படும்.
எங்கே என்று கேட்கறீர்களா..?
ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் தான். அப்துல்கலாம் இங்கே தான் தன் இளமை காலத்தில் தங்கி பணி புரிந்தார்.
நேற்று நாடு முழுவதும் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. என்றும் நம்மை எதிர்க்கும் மாநிலத்தில் கூட கலாமை நினைத்து பெருமிதம் கொள்கின்றனர்.
பல்வேறு மாநிலங்கள் நேற்று கலாமிற்கு சிறப்பு செய்தன. கேரளா ஒரு படி முன்னேறி கடந்த வாரமே அவருக்கு அருங்காட்சியகம் அமைத்தது.
அப்துல்கலாம் தங்கி பணிபுரிந்த மாநிலம் ஒடிசா, அவர்கள் சும்மா இருப்பார்களா..?
ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டி மாநில அரசு பெருமைப்படுத்தியது.
கலாமின் நினைவு தினம் ஒடிசாவிலும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டார்.
அப்போது, ஒடிசா மாநிலத்தின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது. ஒ
டிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள சாந்திப்பூர் மற்றும் பத்ராக் மாவட்டத்தில் உள்ள வீலர் தீவில்தான் அப்துல் கலாம் தனது இளமை கால பொழுதுகளை எல்லாம் ஆரய்ச்சியில் கழித்தார்.