தங்கத்தை மலை மலையாய் குவித்து வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல்!
தங்கம் மனிதர்களின் அணிகலன்களாக மட்டுமல்ல ஒரு நாட்டின் தங்க கையிருப்பே அந்த நாட்டின் நாணய மதிப்பை நிர்ணயிக்கின்றது.
அந்த வகையில் தங்கத்தை மலை மலையாய் குவித்து வைத்திருக்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்திருக்கிறது.
பழங்காலம் தொட்டுத் தங்கம் ஒரு பாதுகாப்பான சேமிப்பாகக் கருதப்படுகின்றது. மேலும் காகிதப் பணம் புழக்கத்திற்கு வருவதற்கு முன் தங்கமே ஒரு நாட்டின் நாணயமாக இருந்தது. தற்கலத்தில் நாணயத்தின் மதிப்பு கையிருப்பு இருக்கும் தங்கத்தை சார்ந்திருப்பதால், பல்வேறு நாடுகள் தங்கத்தை மலை போல குவித்து வருகின்றன. இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவின் கையிருப்பில் சுமார் 557.7 டன் தங்கம் உள்ளது. இது நாட்டின் சேமிப்பில் சுமார் 6.7 சதவீதம் ஆகும். 2009 ஆம் ஆண்டில், இந்தியா வெளிநாட்டுச் சந்தைகளில் இருந்து சுமார் 200 டன் தங்கத்தை வாங்கியது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் தங்கக் கையிருப்பு விரிவடைந்துள்ளது.
அதிகமான தங்க கையிருப்பு உடைய மற்றொரு முக்கியமான நாடு சீனா ஆகும். இதனுடைய மொத்த தங்க கையிருப்பு சுமார் 1054.1 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 1 சதவீதம் ஆகும். ஸிஜின் நிறுவனம் சீனாவின் மிக முக்கியச் சுரங்க அமைப்பு ஆகும்.
ரஷ்யாவின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 1,208.2 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 12.2சதவீதம் ஆகும். ரஷ்யாவில் தங்கம், வெள்ளி, வைரம், மற்றும் விலையுயர்ந்த கற்கள், போன்ற பல இயற்கை வளங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன், ரஷ்யா தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களைச் சுமார் 160 டன் வாங்கியது.
பிரான்ஸ் நாட்டின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 2435.4 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 65.6 சதவீதம் ஆகும். இதனுடைய தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 145 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பல்வேறு தங்கச் சுரங்கங்கள் உள்ளன. அது முதன்மை நிதி நிறுவன தங்க ஒப்பந்தத்தில் இருந்து சுமார் 572 டன் தங்கம் வழங்கியது.
இத்தாலியின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 2451.8 டன் ஆகும். இது அதன் மொத்த சேமிப்பில் சுமார் 66.6 சதவீதம் ஆகும். இத்தாலியில், தங்கச் சுரங்கங்களுக்குப் பஞ்சமே இல்லை. இத்தாலிய அரசு அவற்றில் இருந்து விலைமதிப்பற்ற தங்கத்தைப் பத்திரமாக வெளியே கொண்டுவருவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
ஜேர்மனியின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 3384.2 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 67 சதவீதம் ஆகும். ஜேர்மனிக்கு ஆண்டுதோறும் தங்கத்தை டன் கணக்கில் வாங்கும் பழக்கம் எப்போதும் இருந்து வருகிறது.
தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் நாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது அமெரிக்கா. இதனுடைய மொத்த கையிருப்பு சுமார் 8133.5 டன். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 72.6 சதவீதம். நியூமேனோன்ட் சுரங்கம் வருடந்தோறும் சுமார் 4.98 மில்லியன் அவுன்ஸ் தங்கத்தை உற்பத்தி செய்யும் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சுரங்க நிறுவனம் ஆகும்.
நெதர்லாந்து நாட்டின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 612.5 டன். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 55.2 சதவீதம். இந்த நாட்டில் உள்ள தங்க சுரங்கங்கள், தங்கத்தை ஏராளமாக உற்பத்தி செய்தாலும், இந்த நாடு பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தங்கத்தை வாங்குகின்றது. நெதர்லாந்தில், பல்வேறு வைர சுரங்கங்களும் உள்ளன.
ஜப்பான் தங்கத்தை அதிகமாக வைத்திருக்கும் மிக முக்கியமான நாடுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் மொத்த தங்க கையிருப்பு சுமார் 765.2 டன் ஆகும். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 2.4 சதவீதம் ஆகும். இது சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தை அதிக விலையில் சர்வதேச சந்தைகளில் விற்கின்றது. இது ஜப்பானின் பொருளாதாரத்தை மிகவும் வலுப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மொத்த தங்க கையிருப்பு சுமார் 1040 டன். இது அதனுடைய மொத்த சேமிப்பில் சுமார் 7.7 சதவீதம் ஆகும். சில நாடுகளின் தங்க கையிருப்பானது ஐயத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சுவிட்சர்லாந்து மிகவும் முக்கியமானதாகும். சுவிட்சர்லாந்து ஒரு அழகான பள்ளத்தாக்கு மட்டுமல்ல, பெரிய தங்க இருப்புக்களை ஒரே இடத்தில் குவித்து வைத்திருக்கும் ஒரு இடமும் ஆகும்.