அமெரிக்காவில் பணவீக்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் திட்டமிட்ட மார்ச் மாத வட்டி வகித உயர்வை அவசர கால அடிப்படையில் வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தங்கம் மீதான தேவை சற்று அதிகரித்துள்ளமையினால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் வெளியான பின்பு சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1825 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,858.65 டொலராகவும் உயர்ந்துள்ளது. அடுத்த 12 – 15 மாதங்களில் வெள்ளி விலையானது 25% அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]