இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (09) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 31 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 318 ரூபாய் 23 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 387 ரூபாய் 84 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 403 ரூபாய் 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபாய் 76 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 344 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 61 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227 ரூபாய் 48 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 237 ரூபாய் 80 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
வங்கிகளில் இன்றைய நிலவரம்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.69 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 318.41 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.99 ரூபாயிலிருந்து 307.24 ரூபாயாக அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 318 ரூபாயிலிருந்து 317.25 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 308 ரூபாய் மற்றும் 317 ரூபாயாக மாறாமலுள்ளமை குறிப்பிடத்தக்கது.