டொனால்ட் ட்ரம்பின் வெற்றியால் கோத்தபாயவின் போலி முகம் அம்பலம்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் முடிவு குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கோத்தபாய வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க பிரஜையான கோத்தபாயவின் பதிவு குறித்து சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தனது வாழ்த்து செய்தியில் தமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவோம் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே தற்போது பெரிதளவில் பேசும் விடயமாக மாறியுள்ளது.
தேசம் என குறிப்பிடுவது அமெரிக்காவையா அல்லது இலங்கையையா என்பதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச சூழ்ச்சிகளை மேற்கொள்ள முயற்சிப்பது வேறு யாரும் அல்ல ராஜபக்சர்கள் என்பதனை இந்த பதிவின் ஊடாக மக்கள் நன்கு அறிந்துக் கொண்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தான் பிறந்த நாட்டை விட அமெரிக்காவை பெரிதாக நினைக்கும் இவ்வாறான இனவாதிகளின் உண்மை முகம் வெளியாகியுள்ளமையினால், கோத்தபாயவின் பொதுபல சேனா அமைப்புகளுக்கும் இனவாதமே முக்கிய நோக்கம் என்பதை மக்கள் தற்போது புரிந்தக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.