அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.
செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தடரில், 19ம் திகதி ஜனாதிபதி கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நடக்கவுள்ள இந்தக் கலந்துரையாடலின் போது இலங்கை -அமெரிக்காவிற்கிடையிலான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்து ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது