ஜூலை 23 இல் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜப்பானுக்கு சென்ற வீரர்களின் முதல் குழு என்ற பெருமையை தற்போது அவுஸ்திரேலிய சாப்ட்போல் மகளிர் அணி பெற்றுள்ளது.
இந்தக் குழு டோக்கியோவின் வடக்கே உள்ள ஓட்டா நகரத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள்.
குழு உறுப்பினர்கள் தினசரி பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், பொது மக்களுடன் தொடர்புகொள்வதற்கும் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய ஒலிம்பிக் அமைப்பாளர்கள் மீது அதிக அழுத்தம் உள்ள நேரத்தில் அவுஸ்திரேலியாவின் சாப்ட்பால் அணி டோக்கியோவுக்கு சென்றுள்ளது.
ஜப்பானில் பெரும்பான்மையான மக்கள் ஒலிம்பிக் மீண்டும் ஒத்திவைக்கப்பட வேண்டும் அல்லது கொவிட் -19 தொற்றுநோயால் இரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் ரசிகர்கள் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் பார்வையாளர்களின் அனுமதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.