டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 6.1 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுரங்க ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பல பகுதிகளும் மின் துண்டிப்புக்கு முகங்கொடுத்தது.
எனினும் நிலநடுக்கம் காரணமாக பரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை என்று ஜப்பானின் பொது ஒளிரப்புச் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தினால் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று கியோடோ செய்திச் சேவை சுட்டிக்காடடியுள்ளது.
நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10.41 மணிக்கு (1341 GMT) எற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]