ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் ப்ரபாத் ஜயசுந்தர 13 இடங்கள் முன்னேறி 19ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னர் தரவரிசையில் 32ஆவது இடத்திலிருந்த ப்ரபாத் ஜயசூரிய, அயர்லாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்களை மொத்தமாகக் கைப்பற்றியதன் மூலம் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
அப் போட்டியில் தனிநபருக்கான அதிசிறந்த இன்னிங்ஸ் பெறுதியைப் பதிவு (52 – 7 விக்.) செய்த ப்ரபாத் ஜயசூரிய 869 தரவரிசைப் புள்ளிகளை மொத்தமாகப் பெற்றுள்ளார்.
அயர்லாந்துடனான போட்டியில் 179 ஓட்டங்களைக் குவித்த திமுத் கருணாரட்ன, ஆடவருக்கான துடுப்பாட்ட வரிசையில் 9ஆம் இடத்திற்கு முன்னேறியள்ளார். அவர் 783 புள்ளிகளபை; பெற்றுள்ளார்.
சதங்கள் குவித்த தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் தரவரிசையில் முறையே 14ஆவது, 42ஆவது இடங்களைப் பெற்றுள்ளனர்.
சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்களுடன் 32ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 59ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.