இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரின் நூற்றாண்டு விழாவை நினைவுகூரும் வகையில் ‘இந்திரா: எ லைஃப் ஆஃப் கரேஜ்’ (‘Indira: A Life of Courage’) என்ற பிரத்யேகப் புகைப்படக் கண்காட்சியை டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் துவக்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் இதுவரையில் பார்வைக்கு வைக்கப்படாத இந்திரா காந்தியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர் பயன்படுத்திய பொருள்கள், டைரிகள், தபால் கார்டுகள், புத்தகங்கள், அவர் கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் அவரது உடைமைகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர். வரலாற்றில் ஒரு நபராக இந்திராகாந்தியைப் பற்றித் தெரிந்திருக்கும் இளைஞர்களுக்கு, இந்தக் கண்காட்சி அவரைப் பற்றிய கூடுதல் சுவாரஸ்யமான தகவல்களை நிச்சயம் அளிக்கும். பார்வையாளர்களுக்கு இந்தக் கண்காட்சி புதியதொரு சிந்தனையை அளிக்கும் என இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளையில் செயலாளர் சுமன் துபே தெரிவித்துள்ளார். இந்தக் கண்காட்சி டெல்லியிலுள்ள இந்திராகாந்தி மெமோரியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.