கொவிட்-19 இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக ஃபைசர்-பயோஎன்டெக் தயாரித்த பி.எஃப்.இ.என் தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இஸ்ரேலின் ஃபைசர் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் உள்ள ஃபைசர் நிறுவன மருத்துவ இயக்குனர் அலோன் ராப்பபோர்ட் வியாழக்கிழமை உள்ளூர் ஊடகங்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கையில்,
ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த கொவிட்-19 தடுப்பூசி உலகிற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொவிட் -19 இன் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
இது சுமார் 90 சதவீதம் கொரோனா வைரஸ் நோயைத் தடுப்பதில் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா, கொரோனா வைரஸின் மாறுபாடு உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் பதிப்பாக மாறி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
http://Facebook page / easy 24 news